6 கதாநாயகிகள் நடித்த படம்; விரைவில் வெளியாகும்

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
6 கதாநாயகிகள் நடித்த படம்; விரைவில் வெளியாகும்

சென்னை, பிப்.22 – தமிழ்ப்படங்களில் பெரும்பாலும் ஒருவர் மட்டுமே கதாநாயகியாக இருப்பார். அதற்கே ரசிகர்கள் ஆர்ப்பரிப்பர். அதுவே ஒரே படத்தில் ஆறு கதாநாயகிகள் நடித்தால்? கல்லூரி மாணவிகள் பற்றிய கதையை மையப்படுத்தி ஆறு நாயகிகள் நடித்த இப்படம் விரைவில் வெளியாகிறது.

சின்னத்திரை இயக்குனர் அரிராஜன் இயக்கிய இப்படம் தொடக்கத்தில் மன்மத ராஜாக்கள் என பெயரிடப்பட்டது. தற்போது இப்படத்தை இளமை ஊஞ்சல் என பெயர் மாற்றம் செய்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தயாரிக்கப்பட்ட இப்படத்தில் நமீதா, கிரண், மேக்னா நாயுடு, உட்பட பலர் நடித்துள்ளனர்.

சுற்றுலா செல்லும் கல்லூரி மாணவிகள் ஒருவருக்குப் பின் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர். இக்கொலைக்குக் காரணம் என்ன? யார் கொலையாளி என்பதே கதை.

 

இப்படம் அடுத்த மாதம் வெளியீடு காண்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை