தோல்வியில் முடிந்த போராட்டம்: ஒரு வயது குழந்தையை அகதிகள் முகாமிற்கு அனுப்பு உத்தரவு

NEWSONEWS  NEWSONEWS
தோல்வியில் முடிந்த போராட்டம்: ஒரு வயது குழந்தையை அகதிகள் முகாமிற்கு அனுப்பு உத்தரவு

நவ்ரூ தீவிலுள்ள அகதிகள் முகாமில் புலம்பெயர்ந்த பெற்றோர்களுடன் ஒரு வயதான ஆஷா என்ற பெண் குழந்தை வசித்து வந்துள்ளது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் சமையல் செய்தபோது முகாமில் ஏற்பட்ட தீவிபத்தில் ஆஷாவின் உடலில் தீக்காயம் ஏற்பட்டு அவுஸ்திரேலியாவில் உள்ள Brisbane's Lady Cilento மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

எனினும், குழந்தையை உடனடியாக முகாமிற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என அரசு உத்தரவிட்டும், குழந்தையின் உடல்நலன் காரணமாக மருத்துவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

இந்த விவகாரம் அவுஸ்திரேலியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்துள்ளது.

இந்நிலையில், அரசின் கோரிக்கையை ஏற்ற மருத்துவர்கள் இன்று ஆஷாவை மருத்துவமனையில் இருந்து வெளியேறி அனுமதி அளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து குழந்தையை பெற்றோருடன் சந்திக்க மறுத்த குடியமர்வு துறை அதிகாரிகள், ஆஷாவை அங்குள்ள சமூக பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், குழந்தையின் உடல்நலன் பூரணக்குணமடைந்த உடனே நவ்ரூ அகதிகள் முகாமிற்கு திருப்பி அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குடியமர்வு துறை அமைச்சரான பீற்றர் துட்டான், ‘அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெறும் நோக்கில் மருத்துவமனைகள் மூலமாக முயற்சிகள் மேற்கொண்டால், அதற்கு அரசு ஒருபோதும் அனுமதி அளிக்காது’ என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மூலக்கதை