சென்னை வெள்ளம் பற்றி திரைப்படம் – வசந்தபாலன் இயக்குகிறார்

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
சென்னை வெள்ளம் பற்றி திரைப்படம் – வசந்தபாலன் இயக்குகிறார்

சென்னை, பிப்.22-

அண்மையில் சென்னையை உலுக்கிய வெள்ளத்தைப் பற்றி படம் எடுக்கவிருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன். வெயில், காவியத் தலைவன் போன்ற படத்தை இயக்கியவர். இவர் அடுத்ததாக சென்னை வெள்ளத்தைப் பற்றிய படத்தை இயக்க போவதாக செய்தி வெளியாகியுள்ளது.

 

சென்னை வெள்ளத்தில் பெரும் சேதம் உண்டானது. இதனை மையக் கருத்தாக கொண்டு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெயிலிலும் மழையிலும் அல்லாடிக் கொண்டிருக்கும் மக்களின் பதிப்பாக இப்படம் இருக்கும். இப்படத்திற்கு செம்பரம்பாக்கம் என்று பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மூலக்கதை