‘பீப்’ பாடல் சர்ச்சை: சிம்பு போலீசில் ஆஜர்

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
‘பீப்’ பாடல் சர்ச்சை: சிம்பு போலீசில் ஆஜர்

சென்னை, பிப்.22 –

பீப் சோங் எனும் பாடலினால் பெரும் சர்ச்சைக்கு ஆளாகியவர் சிம்பு. இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க, காவல் நிலையத்தில் ஆஜரானார் சிம்பு.

கடந்த 15ம் தேதி, இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 24ம் தேதி கோவை காவல் துறை முன் ஆஜராகவேண்டும் என தீர்ப்பளித்தார். இதனை ஒட்டி, இன்று காலை (இந்திய நேரப்படி) 10மணிக்கு கோவை காட்டூர் காவல் நிலையத்தில் வந்த சிம்பு, அங்கு காவல் அதிகாரியிடம் வழக்கு தொடர்பாக விளக்கம் அளித்தார். சிம்பு உடன் அவரின் தந்தை டி.இராஜேந்தரும் காவல் நிலையத்திற்கு வந்திருந்தார்.

 

இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனிருத், இப்பாடலுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என கடந்த மாதமே காவல் நிலையத்தில் விளக்கம் அளித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை