கடலோர பகுதிகளில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கிய விவகாரம்: ஜவடேக்கர் விளக்கம்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
கடலோர பகுதிகளில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கிய விவகாரம்: ஜவடேக்கர் விளக்கம்

தூத்துக்குடி மற்றும் கடலோர பகுதிகளில் மீன்கள் இறந்து கரை ஒதுங்குவது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார்.

கோவை ஆணைக்கட்டியில் உள்ள சலீம் அலி மையத்தின் வெள்ளி விழாவில் பங்கேற்ற மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், நடிகர் ரஜினிகாந்த் மீது மக்கள் அளவற்ற அன்பு வைத்திருப்பதாகவும், அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டிருப்பது விருதுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் தொடர்ச்சியாக  திமிங்கலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது பற்றி கருத்து தெரிவித்த ஜவடேக்கர், இந்தியாவில் மட்டுமல்ல, பல்வேறு நாடுகளிலும் இதுபோன்ற உயிரிழப்புகள் நடைபெற்றுள்ளதாகவும்,

இது குறித்து சென்னை கடல்சார் மையத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். ஆய்விற்கு பின்னர் காரணங்கள் தெரிய வரும் என்றும் அவர் கூறினார்.

மூலக்கதை