புதிய இயக்குனர்கள் வருகை சந்தோஷமாக இருக்கிறது : ஏ.ஆர்.ரகுமான்

தினகரன்  தினகரன்
புதிய இயக்குனர்கள் வருகை சந்தோஷமாக இருக்கிறது : ஏ.ஆர்.ரகுமான்

சென்னை : வி.கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் படம், ‘கணிதன்’. டி.என்.சந்தோஷ் இயக்குகிறார். அதர்வா, கேத்ரின் தெரசா, தருண் அரோரா, கருணாகரன் நடிக் கிறார்கள். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு. டிரம்ஸ் சிவமணி இசை அமைக்கிறார். இதன் பாடல்களை ஏ.அர்.ரகுமான் வெளியிட, ஏ.ஆர்.முருகதாஸ் ெபற்றுக் கொண்டார். பின்னர் ஏ.ஆர் ரகுமான் பேசும்போது ‘எப்போதாவது இதுபோன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். ஒரு குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொண்டது போலிருக்கிறது. ஒவ்வொரு முறை விழாவில் கலந்து கொள்ளும்போது புதிய இயக்குனர்களின் முகங்களை பார்க்கிறேன், அவர்களின் வருகை சந்தோ ஷமாக இருக்கிறது. சிவமணி இந்த படத்துக்கு கொடுத்திருக்கும் இசை சிறிய அளவுதான். அவருக்குள் ஒரு இசை சுரங்கமே இருக்கிறது’ என்றார்.ஏ.ஆர்.முருகதாஸ் பேசும்போது “துப்பாக்கி படத்தின் எனக்கு உதவியாளராக இருந்த அனைவருமே இயக்குனர்கள் ஆகிவிட்டார்கள். சந்தோஷும் எனது உதவியாளர்தான். நல்ல கதையை தேர்வு செய்வதும், ேதர்வு செய்த கதைக்காகக் கடுமையாக உழைப்பதும்தான், நல்ல ஹீரோவுக்கான அடையாளம். அது அதர்வாவிடம் இருக்கிறது’ என்றார்.விழாவில், தயாரிப்பாளர் தாணு, பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடம் இசைக் கலைஞர் விக்கு விநாயகம், தவில் கலைஞர் காரைக்குடி மணி, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன், அட்லி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மூலக்கதை