தென்மாவட்ட மக்களின் வாழ்வை சொல்லும் சேதுபூமி

தினகரன்  தினகரன்
தென்மாவட்ட மக்களின் வாழ்வை சொல்லும் சேதுபூமி

சென்னை, : தமன், சம்ஸ்கிருதி, சிங்கம்புலி, ராஜலிங்கம், ஜுனியர் பாலையா உட்பட பலர் நடித்துள்ள படம், ‘சேதுபூமி’. ராயல் மூன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் எம்.ஏ.ஹபீப் தயாரித்துள்ளார். ஒளிப்பதிவு, எஸ்.முத்துராமலிங்கம். இசை: பாரதி, மோனிஷ். பாடல்கள், நந்தலாலா. எழுதி இயக்கியுள்ள கேந்திரன் முனியசாமி கூறியதாவது: ராமநாதபுரம், சிவகங்கை பகுதி மக்களிடம் வறுமையும், கோபமும் இருக்கும். அந்த கோபத்துக்கான நியாயம், அவர்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை படத்தில் சொல்லியிருக்கிறோம். மனிதன் தனது உறவுகளையும், உணர்வுகளையும் மறந்து வருவது இந்த சமூகத்துக்கே கேடாக மாறிவிடும் என்பதை சொல்லும் படம் இது. தென்மாவட்ட மக்களின் வாழ்க்கையை யதார்த்தமாகச் சொல்லி இருக்கிறோம். 5ம் தேதி ரிலீசாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை