அகிரா குரோசேவா கல்லறையில் மிஷ்கின்

தினகரன்  தினகரன்
அகிரா குரோசேவா கல்லறையில் மிஷ்கின்

சென்னை, :  ஜப்பான் சென்றுள்ள மிஷ்கின், அங்கு புகழ்பெற்ற இயக்குனர் அகிரா குரோசேவாவின் கல்லறையை முத்தமிட்டு வணங்கினார்.
 பொங்கல் திருநாளை கொண்டாடுவதற்காக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள தமிழ் சங்கம், இயக்குனர் மிஷ்கினை அங்கு அழைத்துச் சென்றது. விழா முடிந்ததும் உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர்  அகிரா குரோசேவாவின் கல்லறையை பார்க்க விரும்பினார் மிஷ்கின். இதையடுத்து அங்குள்ள தமிழ் நண்பர்கள் அவரின் கல்லறை இருக்கும் காம குரா என்ற கடற்கரை ஊருக்கு அழைத்துச்சென்றனர். அங்கு குரோசே வாவின் கல்லறையை சுத்தம் செய்து, வணங்கினார் மிஷ்கின்.

மூலக்கதை