நான் திருமணத்துக்கு எதிரானவன் இல்லை - சித்தார்த்

தினகரன்  தினகரன்
நான் திருமணத்துக்கு எதிரானவன் இல்லை  சித்தார்த்

சென்னை, : திருமணத்துக்கு நான் எதிரானவன் இல்லை என்று நடிகர் சித்தார்த் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:நான் தயாரித்து நடித்துள்ள ‘ஜில் ஜங் ஜக்’, காமெடி கதையுடன் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றினேன். சுந்தர்.சி இயக்கத்தில் நடித்துள்ள ‘அரண்மனை 2’, பேய் கதையுடன் காமெடியும் கலந்து உருவாகியுள்ளது. இந்த படங்கள் என்னை வேறொரு கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் என்று நம்புகிறேன்.எனது திருமணம் பற்றி அடிக்கடி கேட்கிறார்கள். திருமணம் என்பது வற்புறுத்தி செய்வது கிடையாது. நான் திருமணத்துக்கு எதிரானவன் இல்லை. சரியான நேரத்தில் எனது திருமணம் நடக்கும். இவ்வாறு சித்தார்த் கூறினார்.

மூலக்கதை