முத்துராமலிங்கம் படத்தில் மகனுடன் நடிக்கிறார் கார்த்திக்

தினகரன்  தினகரன்
முத்துராமலிங்கம் படத்தில் மகனுடன் நடிக்கிறார் கார்த்திக்

சென்னை, : குளோபல் மீடியா ஒர்க்ஸ் சார்பில் டி.விஜய் பிரகாஷ் தயாரிக்கும் படம்,  ‘முத்துராமலிங்கம்’. கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக கேத்ரின் தெரசா நடிப்பதாக இருந்தது. இப்போது பிரியா ஆனந்த் நடிக்கிறார். முக்கியமான கேரக்டர் ஒன்றில் பிரபு நடிப்பதாக இருந்தது. அவருக்கு பதில் கவுதமின் அப்பா, கார்த்திக் நடிக்கிறார். மற்றும் சுமன், ராதாரவி, விவேக், சுகன்யா உட்பட பலர் நடிக்கின்றனர். இளையராஜா இசை அமைக்கிறார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம், எழுதி ராஜதுரை இயக்குகிறார். பாடல்களை பஞ்சு அருணா சலம் எழுதுகிறார். இதன் படப்பிடிப்பு நேற்று முன்தினம் தொடங்கியது.

மூலக்கதை