ஆகம் என்றால் என்ன?

தினகரன்  தினகரன்
ஆகம் என்றால் என்ன?

சென்னை, : இர்ஃபான், தீக்‌ஷிதா, ஜெயப்பிரகாஷ், ரியாஸ்கான், பிரேம், ரவிராஜா உட்பட பலர் நடித்துள்ள படம், ‘ஆகம்’. ஜோஸ்டார் என்டர்பிரைசஸ் சார்பில் கோட்டீஸ்வரராஜு தயாரித்துள்ளார். ஒளிப்பதிவு, ஆர்.வி.சரண். இசை, விஷால் சந்திரசேகர். திரைக்கதை, வசனம்: தினேஷ். கதை எழுதி இயக்கியுள்ள டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீ ராம், கூறியதாவது:இந்தியாவில் படித்துவிட்டு, வெளிநாடுகளில் வேலை பார்த்து, அந்த நாடுகளை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இந்தியாவைப் பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த நிலை ஏன்? இதை மாற்ற முடியாதா? இந்தியாவில் படித்தவர்களுக்கு இங்கேயே உரிய வேலை கொடுக்கப்பட்டால், நம் திறமைசாலிகளின் உழைப்பு இங்கேயே பயன்படுத்தப்படும். நம் நாடும் வல்லரசாக மாறும் என்ற கருத்தைச் சொல்லும் படம் இது. அதற்கான வழிமுறை ஒன்றையும் சொல்கிறோம். ‘ஆகம்’ என்றால், ‘வருகை’ என்று பொருள். நம் நாட்டின் பெருமையை உயர்த்துவதற்காக, ‘வருகை’ என்ற புதிய திட்டம் ஒன்றைச் சொல்லியிருக்கிறோம். அடுத்த மாத இறுதியில் படம் ரிலீசாகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை