அண்ணா பிறந்தநாளையொட்டி மாணவ–மாணவிகளுக்கான போட்டி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (7:40 IST)

மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (7:40 IST)

அண்ணா பிறந்தநாளையொட்டி மாணவ–மாணவிகளுக்கான போட்டி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் அண்ணா பிறந்தநாளையொட்டி மாணவ–மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்படுகிறது.

இதுதொடர்பாக தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை நிறுவனர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–

தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில், அண்ணாவின் பிறந்த நாளினையொட்டி, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ–மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதை ஒப்பித்தல் ஆகிய போட்டிகள் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு 107–வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்ட அளவிலான போட்டிகள் கடந்த 2015 நவம்பர் 14, 15 மற்றும் 27, 28 ஆகிய தேதிகளில் மிகவும் எழுச்சியோடு நடைபெற்று, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகையும் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

மாநில அளவிலான இறுதிப்போட்டிகள் பிப்ரவரி 6, 7 (சனி, ஞாயிறு) ஆகிய இருநாட்கள் சோழிங்கநல்லூர் ஜி.பி.ஜனராஜன் திருமண மண்டபத்தில் நடைபெறும். இறுதிப் போட்டி ஒவ்வொன்றிலும் வெற்றி பெறும் பள்ளி–மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.25,000, இரண்டாம் பரிசு ரூ.15,000, மூன்றாம் பரிசு ரூ.10,000, ஆறுதல் பரிசு ரூ.5,000 வீதம் (10 பேருக்கு) தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.

மூலக்கதை