ஏற்றுமதியில் பெரிய மாற்றமில்லைஜிஎஸ்டி அமலான பிறகு ஜவுளித்துறை ஏற்றம்பெறும்: ஆணையர் நம்பிக்கை

தினகரன்  தினகரன்
ஏற்றுமதியில் பெரிய மாற்றமில்லைஜிஎஸ்டி அமலான பிறகு ஜவுளித்துறை ஏற்றம்பெறும்: ஆணையர் நம்பிக்கை

ஏற்றுமதியில் பெரிய மாற்றமில்லை

00:16:43Thursday2016-01-28

மும்பை: நாட்டின் ஜவுளி ஏற்றுமதி நடப்பு ஆண்டில் 4,000 கோடி டாலராக இருக்கும் என்று மத்திய ஜவுளித்துறை ஆணையர் கவிதா குப்தா  தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘ஜவுளி ஏற்றுமதி கடந்த 2014-15 நிதியாண்டில் 4,140 கோடி டாலராக இருந்தது. 2013-14ம் ஆண்டில்  இந்த ஏற்றுமதி மதிப்பு 3,931 ேகாடி டாலராகும். நடப்பு ஆண்டில் இந்த ஏற்றுமதி 4,000 கோடி டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த  ஆண்டுடன் ஒப்பிடும்போது இதில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது.

உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையும் ஏற்றுமதி குறைய காரணம். இருப்பினும், இது சவால் நிறைந்ததாக இல்லை. ஜவுளித்துறை  அமைச்சகம் இந்த துறைக்கு முடிந்த அளவுக்கு ஆதரவை அளிக்கும். ஜவுளித்துறை தற்போது சற்று பின்தங்கிய நிலையில் இருந்தாலும்,  எதிர்காலத்தில் இத்துறை மேலும் சிறப்பாக இருப்பதற்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு இத்துறையில்  குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எதிர்பார்க்கலாம் என்றார்.

மூலக்கதை