இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை ஹீனா சித்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை ஹீனா சித்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

ஆசிய ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் தகுதிச் சுற்று போட்டியில் தங்கப்பதக்கம் வென்று, இந்திய வீராங்கனை ஹீனா சித்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 

பிரேசிலில் ரியோ ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து வகையான விளையாட்டு பிரிவுகளிலும் தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 

இதில் ஆசிய கண்டத்திலுள்ள வீரர்களுக்கான ஆசிய ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் தகுதிச் சுற்று போட்டி டெல்லி கர்னி துப்பாக்கிச் சுடுதல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

இதில் மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து 387 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றதோடு, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பையும் உறுதி செய்துள்ளார். 

ஒலிம்பிக்கில் பிஸ்டல் பிரிவில் பங்கேற்க தேர்வான முதல் இந்திய வீராங்கனை ஹீனா சித்து என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள ஒன்பதாவது இந்திய வீராங்கனை ஹீனா சித்து ஆவார்.

மூலக்கதை