விறுவிறு வியாபாரத்தில் ‘கபாலி’ வெளிநாட்டு விநியோக உரிமை!

தினகரன்  தினகரன்
விறுவிறு வியாபாரத்தில் ‘கபாலி’ வெளிநாட்டு விநியோக உரிமை!

சூப்பர்ஸ்டாருக்கு ‘பத்மவிபூஷன்’ கௌரவம் கிடைத்த சந்தோஷத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறது திரையுலகம். இதுஒருபுறமிருக்க, பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் ‘கபாலி’ படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமை இன்னொருபுறம் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கலைப்புலி எஸ்.தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அமெரிக்க விநியோக உரிமையை மட்டுமே 8.5 கோடிக்கு வாங்கியிருக்கிறதாம் சினி கேலக்ஸி நிறுவனம். தமிழ் சினிமாவைப் பொறுத்துவரை மிக அதிக விலைகொடுத்து வாங்கப்பட்டிப்பது ‘கபாலி’தான்.

அதேபோல் ஆஸ்திரேலிய விநியோக உரிமையை 1.65 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறாராம் ஸ்ரீராம் எனும் விநியோகஸ்தர். இதுதவிர மலேசியாவில் ‘கபாலி’ படத்திற்கு இதுவரை எந்த இந்திய படத்திற்கும் கொடுக்கப்படாத விலை கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். காரணம், ‘கபாலி’யின் முக்கிய காட்சிகள் பல மலேசியாவில் படமாக்கப்பட்டிருப்பது மட்மின்றி, ரஜினிக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் மலேசியாவில் இருப்பதும்தான். மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்பொரேஷன் நிறுவனம் மலேசியா விநியோக உரிமையை கைப்பற்றியுள்ளதாம்

மூலக்கதை