ஊடகவியலாளர்கள் மீதான கடத்தல்- படுகொலைகள் பற்றி விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு தேவை என வலியுறுத்தி கையெழுத்து வேட்டை!

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
ஊடகவியலாளர்கள் மீதான கடத்தல் படுகொலைகள் பற்றி விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு தேவை என வலியுறுத்தி கையெழுத்து வேட்டை!

Wednesday, 27 January 2016 04:40

கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை மற்றும் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரிப்பதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவினை அரசாங்கம் உடனடியாக நிறுவ வேண்டும் என்று கோரி கொழும்பு கோட்டையில் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

“இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் எதிராக இடம்பெற்ற அனைத்துக் குற்றங்களையும் விசாரணை செய்ய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. என்றாலும், இதுவரை இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை. எனவே, இது தொடர்பில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று இந்த கையெழுத்து வேட்டையை ஒருங்கிணைத்துள்ள உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தக் கையெழுத்து வேட்டையில் சிவில் சமூகப் பிரதிநிதிகள், கல்வியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்களின் உறவினர்கள் மற்றும் நாட்டிலுள்ள பல்வேறு ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 

மூலக்கதை