அருணாச்சல பிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமுல்!

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
அருணாச்சல பிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமுல்!

Tuesday, 26 January 2016 16:42

அருணாச்சல பிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அமல் படுத்தி உள்ளார். 

காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த அருணாச்சல பிரதேஷில், அம்மாநில முதல்வர் நபம் துகிக்கு எதிராக காங்கிரஸ் எம் எல் ஏக்கள் 14 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். இதனால் மொத்தம் 60 இடங்களைக் கொண்ட அருணாச்சல

சட்டப்பேரவையில் காங்கிரஸின் பலம் 27 ஆகக் குறைந்தது. பாஜகவின் பலம் 33 ஆக உயர்ந்தது. இதையடுத்து சட்டப்பேரவை தலைவர் அமைச்சரவையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த தீர்மானத்துக்கு கவுஹாத்தி நீதிமன்றம் தடை விதித்தது.

இதையடுத்து அருணாச்சல பிரதேஷில் குடியரசு தலைவர் ஆட்சியை பிரணாப் முகர்ஜி அமுல் படுத்தி உள்ளார்.

 

மூலக்கதை