2 லட்சத்துக்கு மேல் மின்னணு டெண்டர் கட்டாயம்

தினகரன்  தினகரன்
2 லட்சத்துக்கு மேல் மின்னணு டெண்டர் கட்டாயம்

00:59:10Wednesday2016-01-27

புதுடெல்லி: மத்திய அமைச்சகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.10 லட்சத்துக்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு மின்னணு டெண்டர் கட்டாயமாக  இருந்தது. இது கடந்த ஆண்டு ஏப்ரலில் ரூ.5 லட்சமாக இருந்தது. தற்போது வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ரூ.2 லட்சத்துக்கு மேற்பட்ட கொள்முதல், ஒப்பந்த  பணிகளுக்கு மின்னணு டெண்டர் கட்டாயம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெளிப்படை தன்மையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-15 நிதியாண்டில் ரூ.2.12 லட்சம் கோடி மதிப்பிலான 3.81 லட்சம்  மின்னணு டெண்டர்களும், நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.3.49 லட்சம் கோடி மதிப்பிலான 4,71,826 மின்னணு டெண்டர்களும் வெளியிடப்பட்டுள்ளது புள்ளி  விவரம் மூலம் தெரியவந்துள்ளது.

மூலக்கதை