நிலக்கரி உற்பத்தி இலக்கை எட்ட உத்தரவு

தினகரன்  தினகரன்
நிலக்கரி உற்பத்தி இலக்கை எட்ட உத்தரவு

00:59:49Wednesday2016-01-27

புதுடெல்லி: வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதை தவிர்க்கவும், இதற்கேற்ப உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் மத்திய அரசு  அறிவுறுத்தி வருகிறது. இதன்படி, கோல் இந்தியா நிறுவனத்துக்கு வரும் 2020ம் ஆண்டுக்குள் 100 கோடி டன் உற்பத்தியை எட்ட இலக்கு நிர்ணயித்து மத்திய  அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதில் நடப்பு ஆண்டுக்கு இலக்கு 550 மில்லியன் டன்களாகும். நிலக்கரி அமைச்சகம் சார்பில் சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், நடப்பு  ஆண்டுக்கான இலக்கை எட்டுமாறு கோல் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை