ஐ.எஸ் க்கு எதிரான கனடாவின் தீர்மானம்! நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்.

CANADA MIRROR  CANADA MIRROR
ஐ.எஸ் க்கு எதிரான கனடாவின் தீர்மானம்! நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்.

தற்சமயம் முழு உலகையும் அச்சுறுத்தி வரும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் குறித்து தமது நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக கனடாவின் நாடாளுமன்றத்தில், விவாதம் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் பிரதமர் ஜஸ்டினின் லிபரல் அரசு இந்த விடயம் தொடர்பில் என்ன தீர்வை முன்வைக்கும் என்பதை அறிவதற்கு அனைவரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

ஐ.எஸ் இற்கு எதிராக போர் தொடுப்பதற்காக உலக நாடுகள் பலவும் முன்வந்துள்ள நிலையில், இன்னும் பல நாடுகள் இதற்கான முயற்சிகளை செய்து வருகின்றன. இவ்வாறான ஒரு நிலையிலேயே கனடாவின் நாடாளுமன்றத்திலும் இவ்விடயம் தற்பொழுது பேசப்பட்டு வருகின்றது.

தமது ராணுவத்தை எவ்வாறு போருக்கு பயிற்சிவிப்பது, குறித்த பயிற்சிகளுக்கு எவ்வளவு தொகை படையினரை உள்வாங்குவது உட்பட அவர்களது அனைத்து நடவடிக்கைகள் தொடர்பிலும் தற்பொழுது விவாதம் இடம்பெறுகின்றன.

அண்மையில் பிரதமர் ஜஸ்டின் இது குறித்து கருத்து தெரிவிக்கும்பொழுது, பயங்கரவாத நடவடிக்கைக்கு எதிராக போர் புரிவதற்கு எமது ராணுவத்திற்கு சிறப்பு பயிற்சியும், விஷேட திட்டங்களும் வழங்கப்படவுள்ளன. மேலும், ஐ.எஸ் இற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஏற்கனவே 69 படையினர் மிகவும் சிறந்த முறையில் விஷேட பயிற்சியளிக்கப்பட்டுமுள்ளனர் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

27 total views, 27 views today

மூலக்கதை