குருவை நம்புனா கோடி நாசம்

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
குருவை நம்புனா கோடி நாசம்

Tuesday, 26 January 2016 08:21

இதுவும் ஒரு ஏமாந்த செய்திதான். அந்த கிராமிய இசை படத்தின் பட்ஜெட் 25 கோடியாம்.

படத்தின் ஹீரோதான் அதை தயாரித்தார். படம் நடக்கும் போதே இதில் இவ்ளோ செலவு இல்லை என்று அவருக்கு புரிந்துவிட்டது. ஆனால் ஷுட்டிங் மட்டும் 225 நாட்கள் நடக்க, “ஆகும்டா அவ்ளோ”’ என்று அவரே மனசை தேற்றிக் கொண்டார். படம் டப்பா. ஆனால் ரிலீசுக்கு முன்பே வேறொரு வலுத்த கம்பெனிக்கு படத்தை 40 கோடிக்கு விற்றுவிட்டார்கள். அவர்கள் வாங்குவதற்கு முன் “படத்தை பார்க்க வேண்டும்” என்று கேட்க, “எங்க பரம்பரைக்கே படத்தை போட்டுக் காட்டி விக்கிற வழக்கம் இல்ல’‘ என்று மறுத்துவிட்டார்களாம். நம்....ம்பி வாங்கிய கம்பெனிக்கு நாலு முழ வேஷ்டி கூட மிஞ்சாது என்கிறார்கள். அந்த நாற்பதிலும், பத்து எனக்கு என்று வாங்கிக் கொண்டாராம் டைரக்டர். எல்லாம் பேர் தந்த பெருமை. சுரண்டல் லாட்டரியை விட கொடுரமான தொழிலா இருக்கே?

மூலக்கதை