மண்டை சொறியும் நடிகர் சங்கம்

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
மண்டை சொறியும் நடிகர் சங்கம்

Thursday, 21 January 2016 08:51

நடிகர் சங்கத்திற்கு வரும் கடிதங்களில் பல ரசிகர்களின் பிதற்றலாக இருக்கும்.

ஆனால் முதன் முறையாக ஜல்லிக்கட்டு தொடர்பான கடிதங்களும், தொலைபேசியில் அழைத்து கண்டனங்களையும் பதிவு செய்கிறார்களாம் சிலர். அவர்கள் முக்கியமாக வலியுறுத்துவது இதுதான். பீட்டா என்ற விலங்குகள் நல வாரியத்திற்காக பரிந்து பேசும் நடிகைகளோ, அல்லது அந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் நடிகர் நடிகைகளோ உங்கள் சங்கத்தில் இருந்தால், (இருந்தாலென்ன... எமி, நக்மா, த்ரிஷா என்றுதான் இருக்கிறார்களே?) அவர்களை அந்த அமைப்பிலிருந்து விலக சொல்லுங்க என்கிறார்களாம். “இதெல்லாம் அவரவர் தனிப்பட்ட உரிமை. நாங்க என்ன பண்ணட்டும்” என்று மண்டை சொறிகிறது சங்கம்.

மூலக்கதை