பங்குச்சந்தை கடும் சரிவு : முதலீட்டாளர்களுக்கு ரூ.1.84 லட்சம் கோடி இழப்பு

தினகரன்  தினகரன்
பங்குச்சந்தை கடும் சரிவு : முதலீட்டாளர்களுக்கு ரூ.1.84 லட்சம் கோடி இழப்பு

00:14:11Thursday2016-01-21

மும்பை: பங்குச்சந்தைகள் நேற்று கடுமையாக சரிவடைந்தன. நேற்று சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தக இடையில் 23,839.76 புள்ளிகளுக்கு சரிந்தது. வர்த்தக முடிவில் 417.80 புள்ளிகள் சரிந்து 24,062.04ல் நிலை பெற்றது. தேசிய பங்குச்சந்தை நிப்டியும் வர்த்தக இடையில் 7,241.5 புள்ளிகளுக்கு வீழ்ந்தது. வர்த்தக முடிவில் 125.80 புள்ளிகள் சரிந்து 7,309.3 புள்ளிகளில் நிலை பெற்றது.

அதாவது, கடந்த 2014ம் ஆண்டு மே 16ம் தேதிக்கு பிறகு இந்திய பங்குச்சந்தைகள் இந்த மாபெரும் வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன. இதனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.1.84 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சீன பொருளாதார மந்த நிலை, கச்சா எண்ணெய் தொடர்ந்து சரிவு போன்றவையே இதற்கு காரணம் என சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.  இதுபோல், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் கடந்த 2013 செப்டம்பர் 4க்கு பிறகு முதல் முறையாக ரூ.68ஐ எட்டியது.  வர்த்தக முடிவில் இந்த மதிப்பு 23 காசுகள் சரிந்து ரூ.67.95ஆக இருந்தது.

மூலக்கதை