டவர் கதிர்வீச்சு பற்றி மேலும் 5 ஆண்டு ஆய்வு நடத்த முடிவு

தினகரன்  தினகரன்
டவர் கதிர்வீச்சு பற்றி மேலும் 5 ஆண்டு ஆய்வு நடத்த முடிவு

00:15:06Thursday2016-01-21

புதுடெல்லி: மொபைல் போன்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிவேக இணைய இணைப்புக்கான  3ஜி தொழில் நுட்பத்தின் அடுத்த கட்டமாக 4ஜி சேவை வழங்க மொபைல்  நிறுவனங்கள் ஆயத்தமாகி வருகின்றன. இது தவிர, கால் டிராப் பிரச்னை தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

இதற்கு டவர் பற்றாக்குறையே காரணமாக கூறப்படுகிறது. எனவே, மொபைல் டவர் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மொபைல் நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.  இந்நிலையில், மொபைல் கதிர்வீச்சு தொடர்பாக கடந்த 2010ம் ஆண்டு ஆய்வை துவக்கிய இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில், இதை மேலும் 5 ஆண்டுக்கு மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

மூலக்கதை