ஐஎஸ் தீவிரவாதிகளுக்கான சம்பளம் பாதியாக குறைப்பு

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
ஐஎஸ் தீவிரவாதிகளுக்கான சம்பளம் பாதியாக குறைப்பு

நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தனது போராளிகளுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் பாதியளவு குறைத்துள்ளது.

சர்வதேச அளவில் மிகவும் கொடூரமான தாக்குதல்களை புரிந்து வரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு,  ஈரான் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய ஓர் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இயங்கி வருகிறது.

தங்களுக்கு எதிராக போர் தொடுக்கும் நாடுகளில் பெரும் அச்சுறுத்தல்களை உருவாக்கி வரும் ஐஎஸ் அமைப்பு பல்வேறு நாடுகளில் காலூன்றவும் முயற்சி செய்து வருகிறது. 

இந்நிலையில் சிரியாவில், ஐ.எஸ். ஆதிக்கத்தில் உள்ள எண்ணெய் வயல்கள், கருவூலம் ஆகியவற்றின் மீது அமெரிக்க கூட்டுப்படைகள் வான் வழித் தாக்குதல்கள் நடத்தியதை அடுத்து, அதன் வருவாய் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. 

இதைத் தொடர்ந்து ஐஎஸ் அமைப்பு தன் போராளிகளுக்கு வழங்கி வந்த சம்பளத்தை பாதியாக குறைத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், நிதி நெருக்கடி எதனால் ஏற்பட்டுள்ளது என்பதை அந்த அமைப்பு தெளிவாக தெரிவிக்கவில்லை.

ஐஎஸ் தீவரவாதிகள் சம்பளமாக இந்திய மதிப்பில்  சுமார் 30 ஆயிரம் முதல் 85 ஆயிரம் வரை பெறுகின்றனர். 

அதாவது உள்நாட்டை சேர்ந்த தீவிரவாதிகள் சுமார் 30 ஆயிரம் சம்பளம் பெற்று வந்துள்ளனர்.

ஆனால், வெளிநாடுகளில் இருந்து ஐஎஸ் அமைப்பில் சேர்ந்தவர்களுக்கு சம்பளம் இரு மடங்காக வழங்கப்பட்டு வருகிறது.

அதேசமயம், தீவிரவாதிகளின் மனைவிகளுக்கு கூடுதலாக ரூ.3500-ம், குழந்தைகளுக்கு ரூ.2000-ம் வழங்கப்படுகிறது.

தற்போது சம்பளம் பாதியாகப்பட்டுள்ளதால், ரூ.15 ஆயிரம் வரை மட்டும் தீவிரவாதிகள் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், மாதமிருமுறை வழங்கப்படும் மளிகை பொருட்கள் வழக்கம் போல் வழங்கப்படும் என்று ஐஎஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

மூலக்கதை