‘வாட்ஸ் அப்’புக்கு ஆண்டு சந்தா இனி இல்லை

தினகரன்  தினகரன்
‘வாட்ஸ் அப்’புக்கு ஆண்டு சந்தா இனி இல்லை

01:31:08Tuesday2016-01-19

முனிச்:வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்த துவங்கியதில் இருந்து ஓராண்டுக்கு இலவசம். அதன்பிறகு, வாடிக்கையாளர்கள் விளம்பர தொல்லையின்றி இச்சேவையை பயன்படுத்த ஆண்டு சந்தா செலுத்த வேண்டும்.  இந்நிலையில், ஜெர்மனியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசிய வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜான் கோம் கூறுகையில், ‘‘வாட்ஸ் அப் பயன்படுத்துவதற்கு 2வது ஆண்டில் இருந்து சந்தா வசூலிக்கும் முறை கைவிடப்படுகிறது. அனைவரும் தடையின்றி இச்சேவையை பெற இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இதற்கேற்ப சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருப்பதால், இதை நடைமுறைப்படுத்த சில வாரங்கள் ஆகலாம். ஒருவேளை வாடிக்கையாளர்கள் இந்த ஆண்டுக்கான கட்டணத்தை ஏற்கெனவே செலுத்தியிருந்தால் அதை திரும்ப பெற முடியாது” என்றார்.

மூலக்கதை