இந்தியாவில் முதலீடு செய்ய ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு ரகுராம் ராஜன் அழைப்பு

தினகரன்  தினகரன்
இந்தியாவில் முதலீடு செய்ய ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு ரகுராம் ராஜன் அழைப்பு

01:33:37Tuesday2016-01-19

மெல்பர்ன்: இந்தியாவில் முதலீடு செய்ய முன்வருமாறு ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் அழைப்பு விடுத்துள்ளார். ஆஸ்திரேலியா சென்றுள்ள ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் அங்குள்ள முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள் மத்தியில் பேசியதாவது: இந்தியாவில் முதலீடு செய்வது மிகவும் லாபகரமானது. உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். எனவே, இங்கிருந்து உங்கள் முதலீட்டை தொடங்குவது சிறந்தது. ஆஸ்திரேலியாவில் உள்ள தொழிலதிபர்கள், தேவை அதிகமுள்ள இடத்தில்தான் முதலீடு செய்ய வேண்டும் என காத்துக்கொண்டிருந்தால், நீங்கள் இந்தியாவில் உள்ள வாய்ப்பை தவறவிட வேண்டியிருக்கும். ஏனெனில் அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளில் வெளிநாட்டு முதலீடு மற்றும் தொழில் தொடங்கும் சலுகைகளை அளிக்க இருக்கிறோம்.

எனவே, இப்போதே இந்தியாவில் தொழில் தொடங்குவது, முதலீடு செய்வது பற்றி முடிவு எடுப்பது சிறந்ததாக இருக்கும். இவ்வாறு ரகுராம் ராஜன் பேசினார்.மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்தில் இணையுமாறு பல்வேறு நாடுகளுக்கு அழைப்பு விடுத்து வருகிறது. இதன்மூலம் ெவளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முடிவு செய்துள்ளது. அதோடு, இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

மூலக்கதை