முட்டை விலை உயர்வு: 415 காசுகளாக நிர்ணயம்

தினகரன்  தினகரன்
முட்டை விலை உயர்வு: 415 காசுகளாக நிர்ணயம்

01:55:36Tuesday2016-01-26

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணயக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.  இதில், 406 காசுகளாக உள்ள  முட்டை விலையில் 9 காசு உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஒரு முட்டையின் விலை 415 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. வட மாநிலங்களில் கடும்  குளிர் காரணமாக முட்டை தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால், அனைத்து மண்டலங்களிலும் முட்டை விலை உயர்ந்து வருகிறது என பண்ணையாளர்கள் தெரிவித்தனர். மற்ற மண்டலங்ளில் நேற்று நிர்ணயம் செய்ப்பட்ட முட்டை விபலை  விபரம்(காசுகளில்) வருமாறு: ஐதராபாத் 400, விஜயவாடா 388, பர்வாலா 428, மும்பை 435, மைசூர் 412, பெங்களூரு 412, கொல்கத்தா 422, டெல்லி 440 காசுகள்.

மூலக்கதை