நிபுணர் குழு அறிக்கை: பரிந்துரைப்படி வரி சீர்திருத்தம்

தினகரன்  தினகரன்
நிபுணர் குழு அறிக்கை: பரிந்துரைப்படி வரி சீர்திருத்தம்

02:00:13Tuesday2016-01-26

புதுடெல்லி: மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள 2016-17 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து பல்வேறு துறையினரிடமும் கருத்துக்களை கேட்டு  வருகிறது.  இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், ‘‘வரி சீர்திருத்தம் தொடர்பாக சில பரிந்துரைகளை பார்த்தசாரதி ஷோம் நிபுணர் குழு அளித்துள்ளது. இதை கருத்தில்  கொண்டு முடிவுகள் எடுக்கப்படும். அதுமட்டுமின்றி, எளிமையான வரி விதிப்பு பற்றி ஆராய நீதிபதி ஆர்.வி.ஈஸ்வர் தலைமையிலும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில், வரி நடைமுறைகள்  மிகவும் எளிமையாக இருப்பது அவசியம்’’என்றார்.

மூலக்கதை