சமையல் காஸ் தொகையை ஆன்லைனில் செலுத்தலாம்

தினகரன்  தினகரன்
சமையல் காஸ் தொகையை ஆன்லைனில் செலுத்தலாம்

02:02:06Tuesday2016-01-26

புதுடெல்லி:  பணமற்ற பரிவர்த்தனைகளான ஆன்லைன் மற்றும் கார்டு பரிவர்த்தனைகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. அதன்படி, சமையல் காஸ் சிலிண்டருக்கான தொகையை ஆன்லைன்  மூலம் செலுத்தும் வசதியை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார். இது வெளிப்படை தன்மை உடையதாகவும், பயன்படுத்த எளிதாகவும் இருக்கும்.

நடப்பு ஆண்டில் 10,000 புதிய காஸ் ஏஜென்சிகள் மற்றும் 2018ல் 10 கோடி புதிய வாடிக்கையாளர்கள் சேர்க்கும் வகையில் எளிய தவணை முறை திட்டம் அமல்படுத்த எண்ணெய் நிறுவனங்கள்  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன என தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

மூலக்கதை