39 லொக்கேஷன்களில் ஆறாது சினம்

தினகரன்  தினகரன்
39 லொக்கேஷன்களில் ஆறாது சினம்

சென்னை: அருள்நிதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதாரவி, துளசி, ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘ஆறாது சினம்’. இது, மலையாளத்தில் ஹிட்டான ‘மெமரீஸ்’ என்ற படத்தின் ரீமேக். ஒளிப்பதிவு, அரவிந்த் சிங். இசை, எஸ்.எஸ்.தமன். படத்தை இயக்கியுள்ள ‘ஈரம்’ அறிவழகன் கூறியதாவது:

இது ஒரு போலீஸ் கதை. குற்றவாளிகளை வேட்டையாடும் காவல்துறை அதிகாரிகளின் குடும்பம், மனரீதியாக எப்படிப்பட்ட சிக்கல்களை சந்திக்கிறது என்பது பிரதானமாக இருக்கும். ஆக்‌ஷன் காட்சிகளும் உண்டு. 39 லொக்கேஷன் களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. எல்லா ஹீரோக்களுக்கும் ஒரு போலீஸ் படம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். அருள்நிதிக்கு இது அந்தமாதிரியான படமாக இருக்கும். போலீஸ் என்றாலே அதிகாரம்தான் முக்கியம். அதனால், அதிகாரம் பற்றிய திருக்குறளைக் கொண்டு
ஒரு பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை