உனக்குள் நானில் 5 வயது சிறுவன் ஹீரோ

தினகரன்  தினகரன்
உனக்குள் நானில் 5 வயது சிறுவன் ஹீரோ

சென்னை: ஸ்டுடியோ 18 என்ற நிறுவனத்துக்காக வெங்கடேஷ் குமார்.ஜி எழுதி இயக்கி தயாரித்துள்ள படம், ‘உனக்குள் நான்’. இதில் 5 வயது சிறுவன் சஞ்ஜித் ஹீரோவாக நடிக்கிறான். மற்றும் கார்த்திக் நாகராஜன், அப்பாராவ், பக்கிரிசாமி நடித்து இருக்கின்றனர். ஒளிப்
பதிவு, ராகுல் ராஜ்குமார். இசை, டோனி பிரிட்டோ. பாடல்கள்: விவேக் வேல்முருகன், ஜி.மல்லிகா. இப்படத்தின் பாடல் சி.டியை, இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்டார். அப்போது படம் பற்றி வெங்கடேஷ் குமார்.ஜி கூறியதாவது:

5 வயது சிறுவனுடைய கண்ணோட்டத்தில் நடக்கும் கதை இது. தன்னுடைய தந்தை ஆபரேட்டராகப் பணிபுரியும் தியேட்டரில், அனிமேஷன் படம் பார்க்கும் சிறுவன், அந்தப் படத்தில் நடக்கும் காட்சிகளின் மாயவலையில் சிக்கி கனவு காணத் தொடங்குகிறான். தன் தாயுடன் அவனது பயணம் தொடங்குகிறது. இதன்மூலம் அன்பு, பாசம் மற்றும் வாழ்க்கை பற்றி தெரிந்துகொள்கிறான். ஆனால், அந்தக் கனவு நிஜமா? பொய்யா என்பது கிளைமாக்ஸ். 77 நிமிடங்கள் ஓடக்கூடிய
இந்தப் படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. மார்ச் மாதம் திரைக்கு வருகிறது.

மூலக்கதை