பெங்களூர் நாட்கள் பாடல் வெளியீடு

தினகரன்  தினகரன்
பெங்களூர் நாட்கள் பாடல் வெளியீடு

சென்னை: மலையாளத்தில் ரிலீசான ‘பெங்களூர் டேஸ்’ படத்தை, பி.வி.பி சினிமாஸ் நிறுவனம் ‘பெங்களூர் நாட்கள்’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்கிறது. ‘பொம்மரிலு’ பாஸ்கர் இயக்கும் இந்தப் படத்தில் ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, பார்வதி, சமந்தா, ராய் லட்சுமி, பிரகாஷ்ராஜ், சரண்யா பொன்வண்ணன் உட்பட பலர் நடித்துள்ளனர். கே.வி.குகன் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழாவில் ராணா பேசியதாவது:

‘பெங்களூர் டேஸ்’ படத்தைப் பார்த்துவிட்டு, பஹத் பாசில் நடித்த கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பதற்காகவே, அதை தெலுங்கில் ரீமேக் செய்ய விரும்பி ‘ரைட்ஸ்’ வாங்க சென்றேன். அப்போதுதான் பி.வி.பி சினிமாஸ் வாங்கி விட்டது தெரிந்தது. கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும், பிறகு அவர்களே அந்த கேரக்டரில் நடிக்க அழைத்தது சந்தோஷமாக இருந்தது. இப்போது தமிழ்ப் பட போஸ்டர்களில் என்னுடைய படம் இருப்பது அதைவிட மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ்நாட்டு ரசிகர்கள் மீது எனக்கு மரியாதை உண்டு. அவர்கள் இதுபோன்ற தரமான நல்ல படங்களை வெற்றிபெற வைப்பார்கள். இவ்வாறு ராணா பேசினார்.

விழாவில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் டி.சிவா, காட்ரகட்ட பிரசாத், ரவி கொட்டாரக்கரா, தயாரிப்பாளர்கள் ‘ஒய்நாட்’ சசி, தனஞ்செயன், எடிட்டர் மோகன், இயக்குனர்கள் மோகன் ராஜா, மகிழ்திருமேனி மற்றும் படக் குழுவினர் கலந்துகொண்டனர்.

மூலக்கதை