காபி உற்பத்தி 3.8 லட்சம் டன்னாக உயர வாய்ப்பு

தினகரன்  தினகரன்
காபி உற்பத்தி 3.8 லட்சம் டன்னாக உயர வாய்ப்பு

01:53:56Monday2016-01-25

மும்பை: இந்திய சர்வதேச காபி திருவிழா 5 நாட்களுக்கு நடக்கிறது. இதில் பங்கேற்ற இந்திய காபி வாரியத்தின் தலைவர் லீனா நாயர் கூறியதாவது: காபி உற்பத்தி இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். நடப்பு ஆண்டில் ெமாத்தம் 3,80,600 டன் காபி உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ரோபஸ்டா உற்பத்தி ஒரு லட்சம் டன்னாக இருக்கும்.  ஐரோப்பிய யூனியன் நாடுகள், அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்கொரியாவுக்கு காபி ஏற்றுமதியை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுபோல் கடந்த 2000வது ஆண்டில் இருந்து உள்நாட்டில் காபி பயன்பாடு ஆண்டுக்கு 5 முதல் 6 சதவீதம் அதிகரித்து வருகிறது என்று தெரிவித்தார்.

மூலக்கதை