அந்நிய முதலீட்டாளர் விலக்கிய முதலீடு ரூ9,963 கோடி

தினகரன்  தினகரன்
அந்நிய முதலீட்டாளர் விலக்கிய முதலீடு ரூ9,963 கோடி

மாற்றம் செய்த நேரம்:1/25/2016 2:03:14 AM

01:56:29Monday2016-01-25

புதுடெல்லி: வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் இந்த மாதத்தில் கடந்த 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை ரூ53,296 கோடியை முதலீடு செய்துள்ளனர். அதேநேரத்தில், இந்த காலக்கட்டத்தில் அவர்கள் விலக்கிக்கொண்ட முதலீடு ரூ63,259 கோடியாகும். இதன்படி நடப்பு மாதத்தில் மட்டும் ரூ9,963 கோடியை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விலக்கிக் கொண்டுள்ளனர். கடன் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீடு ரூ2,353 கோடியாக உள்ளது.  இந்திய பங்குச்சந்தையில் திடீரென ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் கணிக்க முடியாததாக உள்ளன. இதுபோல் ரூபாய் மதிப்பும் அதிரடியாக வீழ்ந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலையும் சரிந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் முதலீடு செய்ய தயங்கி விலக்கிக்கொண்டதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மூலக்கதை