சீன டயர் இறக்குமதிக்கு கட்டுப்பாடு வருமா?

தினகரன்  தினகரன்
சீன டயர் இறக்குமதிக்கு கட்டுப்பாடு வருமா?

02:02:42Monday2016-01-25

புதுடெல்லி: இந்தியாவின் பொருளாதாரத்துக்கு வேட்டு வைப்பதில் முக்கிய நாடாக இருக்கிறது சீனா. இங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் பஞ்சு, ஸ்டீல் பொருட்கள், பிளாஸ்டிக் பொம்மைகள், சாக்லேட்கள் போன்றவை இந்த துறைகள் சார்ந்த உள்நாட்டு தொழில்களை கடுமையாக பாதிக்கின்றன. இதுபோல், மலிவு விலையில் வாகன டயர்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக பஸ் மற்றும் டிரக்குகளுக்கான ரேடியல் டயர்கள் சீனாவில் இருந்து அதிகம் இறக்குமதியாகின்றன. இது உள்நாட்டில் டயர் உற்பத்தியாளர்களை கடுமையாக பாதிக்கிறது. இது மட்டுமின்றி உள்நாட்டில் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்ற கொள்கைக்கு எதிராகவும் இது அமைந்து விடுகிறது. எனவே, உள்நாட்டில் டயர் உற்பத்தி துறையில் முதலீட்டை பெருக்கவும், உற்பத்திக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் சீன டயர்கள் இறக்குமதிக்கு 30 சதவீதம் பொருள் குவிப்பு வரி விதிப்பது அவசியமாகும் என வாகன டயர் உற்பத்தியாளர்கள் அமைப்பு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

மூலக்கதை