இந்தியா-பிரான்ஸ் இடையே 16 ஒப்பந்தம் கையெழுத்து

தினகரன்  தினகரன்
இந்தியாபிரான்ஸ் இடையே 16 ஒப்பந்தம் கையெழுத்து

02:04:32Monday2016-01-25

சண்டிகர்: ஹெலிகாப்டர் தயாரிப்பு, ஸ்மார்ட் சிட்டி உட்பட 16 ஒப்பந்தங்கள் இந்தியா - பிரான்ஸ் இடையே கையெழுத்தாகியுள்ளன.  இந்தியா-பிரான்ஸ் தொழிலதிபர்கள் மாநாடு நேற்று சண்டிகரில் நடந்தது. இதில் பிரான்ஸ் அதிபர் ஹோலண்டேவும், பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டனர். அப்போது இரு நாடுகள் இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.  மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஹெலிகாப்டர் தயாரிக்க மகிந்திரா மற்றும் ஏர்பஸ் குரூப் நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதுபோல் ஊரக பகுதிகளில் மேம்பாடு, போக்குவரத்து வசதி, நீர் மற்றும் கழிவு மேலாண்மை, சூரிய சக்தி மின்சாரம் தொடர்பான ஒப்பந்தங்களும் இதில் அடங்கும்.

மூலக்கதை