45 ஆயிரம் கோடி நிதி முறைகேடு : பியர்ள்ஸ் குழும இயக்குநருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 24, ஜனவரி 2016 (9:37 IST)

மாற்றம் செய்த நாள் :24, ஜனவரி 2016 (9:37 IST)

45 ஆயிரம் கோடி நிதி முறைகேடு :

 பியர்ள்ஸ் குழும இயக்குநருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

45 ஆயிரம் கோடி நிதி முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பியர்ள்ஸ் குழும நிர்வாக இயக்குநர் நிர்மல் சிங் பாங்கூ உள்ளிட்ட நான்கு பேரை, அடுத்த மாதம் 6ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு, தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

 இதுகுறித்து நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்ததாவது: சுமார் 5 கோடி முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேரின் 14 நாள் சிபிஐ காவல் நிறைவடைந்ததை அடுத்து தில்லி பெருநகர மாஜிஸ்திரேட் சுகந்தா அகர்வால் முன்னிலையில் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் நான்கு பேரையும், அடுத்த மாதம் 6ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். மேலும், நிர்மல் சிங் பாங்கூவுக்கு அண்மையில் சீறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றதால், அவருக்கு சிறை மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளிக்க வேண்டும் எனவும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

 

மூலக்கதை