சிறைகளில் நடந்த லோக் அதாலத்தில் 406 கைதிகள் விடுதலை: சட்டப்பணி ஆணைக்குழு தகவல்

கதிரவன்  கதிரவன்
சிறைகளில் நடந்த லோக் அதாலத்தில் 406 கைதிகள் விடுதலை: சட்டப்பணி ஆணைக்குழு தகவல்

சிறையில் உள்ள விசாரணை கைதிகளுக்கு சட்டவிழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களது வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டுவர சிறையில் லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றத்தை நடத்தவும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாநில சட்டப்பணி ஆணைக்குழுவுக்கு, தேசிய சட்டப்பணி ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் லோக் அதாலத் மற்றும் சட்டவிழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்த லோக் அதாலத்தில், சிறு குற்றங்கள் தொடர்பான 941 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டு விசாரணை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அதில் குற்றத்தை ஒப்புக் கொள்ளும் கைதிகள், சிறையில் இருந்த காலத்தையே தண்டனை காலமாக எடுத்துக்கொண்டு, அவர்களை விடுதலை செய்து லோக் அதாலத் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இவ்வாறு நேற்று மட்டும் 451 வழக்குகள் முடிவுக்கு வந்து, 406 கைதிகள் விடுதலை ஆகியுள்ளனர்.

2016-01-24

மூலக்கதை