வடிவுடையம்மன் கோவிலில் அர்ச்சகர்கள் கருத்து வேறுபாடா?: நம்பூதிரிகள் சொந்த ஊருக்கு சென்று விட்டதால் பரபரப்பு

கதிரவன்  கதிரவன்
வடிவுடையம்மன் கோவிலில் அர்ச்சகர்கள் கருத்து வேறுபாடா?: நம்பூதிரிகள் சொந்த ஊருக்கு சென்று விட்டதால் பரபரப்பு

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் மூலஸ்தானத்தில் அர்ச்சகர்களாக கேரளாவைச் சேர்ந்த நம்பூதிரிகள் கேசவன்(வயது 54), ஜெயம்(53) ஆகியோர் கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். நம்பூதிரிகள் திருமணம் செய்து கொள்ளமாட்டார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொடுக்கும் காணிக்கையை வைத்து வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் சக கோவில் அர்ச்சகர்களுக்கும், நம்பூதிரிகளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பல ஆண்டுகளாக பாரம்பரியமாக செய்து வந்த அர்ச்சகர் வேலையை விட்டு, விட்டு நம்பூதிரிகள் 2 பேரும் தங்களது சொந்த ஊரான கேரளாவுக்கு சென்று விட்டதாக பக்தர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கோவில் உதவி ஆணையர் லதாவிடம் கேட்டபோது, “நம்பூதிரிகள் 2 பேரும் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கோவிலில் அர்ச்சகர்களாக உள்ளனர். தற்போது உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் ஒரு மாதம் சொந்த ஊரில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று விட்டு வருவதாக கூறிச்சென்று உள்ளனர். வேறு எந்த பிரச்சினையும் இல்லை. அவர்கள் திரும்பி வந்து மீண்டும் பணி செய்வார்கள்” என்றார்.

2016-01-23

மூலக்கதை