உடல் உறுப்பு மாற்று சிகிச்சைகளுக்காக செம்மறியாடுகள் , பன்றிகளில் மனித உடல் உறுப்புகள் விருத்தி

கதிரவன்  கதிரவன்
உடல் உறுப்பு மாற்று சிகிச்சைகளுக்காக செம்மறியாடுகள் , பன்றிகளில் மனித உடல் உறுப்புகள் விருத்தி

உடல் உறுப்பு மாற்று சிகிச்சை தேவைப்பாடுள்ளவர்களுக்கான உடல் உறுப்புகளைப் பெறும் முகமாக செம்மறியாடுகள் மற்றும் பன்றிகளில் மனித உறுப்புகளை விருத்தி செய்யும் நடவடிக்கையில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்க மின்னேஸோட்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இருதய சத்திர சிகிச்சை நிபுணர் டானியல் காரி தலைமையிலான குழுவினரால் இந்த பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் 50 க்கு மேற்பட்ட செம்மறியாடுகள் மற்றும் பன்றிகளில் முழுமையான செயற்படும் மனித இருதயத்தை விருத்தி செய்யும் முகமமாக மனித விலங்கு மூலவுயிர்க்கலங்கள் உட்செலுத்தப்பட்டுள்ளன.

இந்தப் பரிசோதனைக்கு அண்மைய மூலவுயர்க்கல உயிரியல் மற்றும் மரபணு ; சீரமைத்தல் உள்ளடங்கலான பிந்திய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

சீரமைக்கப்பட்ட மரபணுக்களைப் பயன்படுத்தி தற்போது விஞ்ஞானிகள் பன்றி அல்லது செம்மறியாட்டின் மூலவுயிர்க்கலங்களிலுள்ள மரபணுக்களை மாற்றுவதற்காக வாய்ப்பை விஞ்ஞானிகள் பெற்றுள்ளனர்.

இதன் மூலம் குறிப்பிட்ட இழையத்தை பரம்பரையலகுகள் ரீதியில் உருவாக்கும் சாத்தியப்பாடு ஏற்பட்டுள்ளது.

உறுப்பு மாற்று சிகிச்சைக்குத் தேவையான உடல் உறுப்புகளைப் உரிய நேரத்தில் பெற முடியாததால் ஆண்டுதோறும் உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான நோயாளர்கள் உயிரிழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2016-01-11

மூலக்கதை