பிரான்சு ஆர்ஜெந்தே பகுதியில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் நிகழ்வு! (PHOTOS)

கதிரவன்  கதிரவன்
பிரான்சு ஆர்ஜெந்தே பகுதியில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் நிகழ்வு! (PHOTOS)

பிரான்சு ஆர்ஜெந்தே தமிழ் சங்கம், ஆர்ஜெந்தே மாநகர சபை இணைந்து நடாத்திய தமிழர் திருநாள் பொங்கல் நிகழ்வு ஆர்ஜெந்தே தமிழ்ச் சங்க மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மங்கள விளக்கினை ஆர்ஜெந்தே தமிழ்ச்சோலை பழைய மாணவர்கள் ஏற்றிவைக்க, பிரெஞ்சு தேசியப் பேரவை உறுப்பினர் பிலிப் டுசே (Phlippe doucet – Conseil national) , ஆர்ஜெந்தே நகரபிதா ஜோர்ஜ் மொத்ரோ (Georges motiron – maire d’argenteui) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பொங்கல் நிகழ்வை பானைவைத்து ஆரம்பித்துவைத்தனர். இவர்கள் தமிழரின் கலாச்சார ஆடையான வேட்டிசால்வை அணிந்து நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

அழகிய கோலமிட்டு அலங்கரிக்கப்பட்ட பந்தலின் நடுவே பொங்கலிடப்பட்டமை கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.
தொடர்ந்து கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. ஆர்ஜெந்தே தமிழ்ச்சோலை மாணவர்களின் நடனம், வாத்திய இசை, தமிழ்ச்சோலை ஆசிரியரின் வயலின் இசை மற்றும் ஓர்கன் இசை, பாடல் என நிகழ்வுகள் யாவும் சிறப்பாக அமைந்திருந்தன.

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.
இந்நிகழ்வில் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

2016-01-18

மூலக்கதை