ஈரான் அணு ஆயுத நடவடிக்கைகளை தவிர்க்க இணக்கம்; சர்வதேசத் தடைகளில் தளர்வு!

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
ஈரான் அணு ஆயுத நடவடிக்கைகளை தவிர்க்க இணக்கம்; சர்வதேசத் தடைகளில் தளர்வு!

Monday, 18 January 2016 05:29

அணு ஆயுத நடவடிக்கைகளை தவிர்ப்பது தொடர்பிலான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட ஈரான் இணங்கியதை அடுத்து, அந்த நாடு மீது விதிக்கப்பட்டிருந்த வர்த்தகத் தடைகள் தளர்த்தப்பட்டுள்ளன. 

ஈரான் இணக்கம் தெரிவித்துள்ள புதிய ஒப்பந்தமானது, பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியில் சமாதானம் மற்றும் பாதுகாப்பினை மேம்படுத்த உதவுமென, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரக் கொள்கைகளுக்குப் பொறுப்பான தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜுலை மாதம் உலக வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்குமிடையில் எட்டப்பட்ட இந்த இணக்கப்பாட்டை அடுத்து, அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த சர்வதேச வர்த்தகத் தடைகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சொத்துக்கள் தளர்த்தப்படவுள்ளதோடு, ஈரானின் சர்வதேச எண்ணெய் வர்த்தக நடவடிக்கைகளும் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

மூலக்கதை