1,000 அஞ்சல் துறை ஏடிஎம் மார்ச்சுக்குள் நிறுவ திட்டம்

தினகரன்  தினகரன்
1,000 அஞ்சல் துறை ஏடிஎம் மார்ச்சுக்குள் நிறுவ திட்டம்

00:23:27Monday2016-01-18

புதுடெல்லி: மார்ச் மாதத்துக்குள் நாடு முழுவதும் 1,000 ஏடிஎம்கள் திறக்க அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அஞ்சல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது நாடு முழுவதும் 12,441 அஞ்சலகங்களில் கோர் பேங்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் 300 ஏடிஎம்கள் உள்ளன. நாடு முழுவதும் ஊரக பகுதிகளில் மட்டும் 1.3 லட்சம் அஞ்சல் அலுவலகங்கள் உள்ளன.

இவற்றில் ஊரக பகுதிகளில் உள்ள அஞ்சலகங்கள் அனைத்திலும் 2017ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சோலார் மின் வசதி ஏற்படுத்தப்படும். அதோடு, பயோமெட்ரிக் முறையில் இயங்கும் கருவிகள் வழங்கப்படும். இந்த ஆண்டு மார்ச்சுக்குள் 1,000 அஞ்சலகங்களில் ஏடிஎம் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இது கிராம பகுதிகளில் உள்ளவர்களும் ஏடிஎம் சேவையை பெற உதவியாக இருக்கும் என்றார்.

மூலக்கதை