செயற்கைக் கண் மூலம் 6 வருடங்களுக்குப் பின் பார்வை ஆற்றல்

கதிரவன்  கதிரவன்
செயற்கைக் கண் மூலம் 6 வருடங்களுக்குப் பின் பார்வை ஆற்றல்

பிரித்­தா­னி­யாவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் புரட்­சி­கர செயற்கைக் கண் (பயோனிக் கண்) மூலம் 6 வரு­டங்­க­ளுக் குப் பின்னர் முதல் தட­வை­யாக பார்வை ஆற்­றலைப் பெற்­றுள்ளார்.

கார்டிப் பிராந்­தி­யத்தைச் சேர்ந்த றியான் லெவிஸ் (49 வயது) என்ற மேற்­படி பெண் 5 வயது சிறு­மி­யாக இருந்த போது தனது பார்வை ஆற்­றலை இழக்க ஆரம்­பித்தார்.

அவர் தனது வலது கண்­ணி­லான பார்வை ஆற்­றலை 16 வரு­டங்­க­ளுக்கு முன்னர் இழந்தார்.

இந்­நி­லையில் 6 வரு­டங்­க­ளுக்கு முன் அவ­ரது பார்வை முழு­மை­யாக பாதிக்­கப்­பட்டு சூரிய ஒளியின் பிர­கா­சத்தை மட்­டுமே அவ­தா­னிக்கும் நிலைக்குத் தள்­ளப்­பட்டார்.

அவ­ருக்கு ஏற்­பட்­டி­ருந்த பரம்­பரை ரீதி­யான பாதிப்பால் அவ­ரது விழித்­தி­ரை­யி­லி­ருந்த ஒளி உணர்­க­லங்கள் அழி­வ­டைந்­தமை கார­ண­மா­கவே அவர் பார்வை ஆற்­றலை இழக்க நேர்ந்­தது.

இத­னை­ய­டுத்து ஒக்ஸ்­போர்ட்­டிலுள்ள ஜோன் ரட்­கிளிப் மருத்­து­வ­ம­னையைச் சேர்ந்த மருத்­து­வர்கள் புரட்­சி­கர செயற் கைக் கண்ணை அவ­ருக்கு வெற்­றி­க­ர­மாக பொருத்தி அவர் மீண்டும் பார்வை ஆற்­றலைப் பெற வழி­வகை செய்­துள்­ளனர்.

இந்­நி­லையில், அவ­ருக்கு செயற் கைக் கண்­ணா­னது 16 வரு­டங்­களுக்கு முன்னர் பார்வை ஆற்­றலை இழந்­தி­ருந்த அவ­ரது வலது கண்ணில் பொருத் ­தப்­பட்­டது.

இந்த செயற்கைக் கண்ணைப் பொருத்­து­வ­தற்­கான அறுவைச் சிகிச்­ சையில் வயதா­த­லுடன் தொடர்­பு­டைய தசை நார் சிதைவு கார­ண­மாக வயோ­தி­பர்­களில் ஏற்­படும் குருட்டுத் தன்­மைக்கு சிகிச்­சை­ய­ளிக்கப் பயன்­படும் விழித்­தி­ரையில் பொருத்­தப்­படும் சிப் உப­க­ரணம் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

மேற்­படி சிப் உப­க­ர­ணத்தை ஜேர்­ம­னிய நிறு­வ­ன­மான ரெரினா இம்­பிளான்ட் ஏஜி உரு­வாக்­கி­யுள்­ளது.

புரட்­சி­க­ர­மான இந்த செயற்கைக் கண்­ணின் ஊடாக ஒருவர் ஒரு பொரு ளைப் பார்க்கும் போது இந்த சிப் உபகரணம் ஒளியை மின்சார சமிக் ஞைகளாக மாற்றி பார்வை நரம்புகள் மூலம் மூளைக்குக் கடத்துகிறது.

இதனால் அவருக்கு குறிப்பிட்ட பொருளைப் பார்ப்பது சாத்தியமாகிறது.

2016-01-06

மூலக்கதை