மீனாட்சி வேண்டாம், இயக்குனர் முடிவு

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
மீனாட்சி வேண்டாம், இயக்குனர் முடிவு

Tuesday, 05 January 2016 08:06

கருப்பசாமி குத்தகைதாரர் மீனாட்சி நடுவில் ஒரு பெரிய கேப் விட்டு விட்டு மீண்டும் தமிழில் நடிக்க வந்தார்.

பார்த்தால்...? மீனாட்சியா, இல்ல மீனாட்சி கோவில் யானையா என்கிற அளவுக்கு அதிர்ச்சி தருகிற அளவுக்கு பாடி பக்குவம்! அப்புறமென்ன? இயக்குனர் கூட்டம் எடுத்தது ஓட்டம். திரும்பி வருவேன்ல? என்று சொல்லிவிட்டு கிளம்பிய மீனாட்சி, ஒரே மாதத்தில் ஸ்லிம்மாகி திரும்பி வர... பலருக்கும் வியப்பு. ஒன்றிரண்டு பட வாய்ப்புகளும் வந்தது. அங்குதான் ரேடியோவில் கொர கொர... ஷாட்டுக்கு கூப்பிட்டால் வர முடியாதளவுக்கு பகலிலேயே மயங்க ஆரம்பித்தாராம். மறுபடியும் ஜெர்க் ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கம். முதல் கட்டமாக ‘வில்லங்கம்’ என்ற படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார் அவர். வாங்கிய அட்வான்சை தர முடியாது என்று மீனாட்சி சொல்ல, அதோடு ஒழிஞ்சுது ஆபத்து என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் அப்படத்தின் இயக்குனர் சரவணன்.

மூலக்கதை