நேரில் முன்னிலையாக 15 நாட்கள் அவகாசம்: அனிருத் கோரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
நேரில் முன்னிலையாக 15 நாட்கள் அவகாசம்: அனிருத் கோரிக்கை

திரைச்செய்தி Tuesday, January 5th, 2016

அனிருத்

கோவை: ஆபாச வார்த்தைகள் கொண்ட பாடல் விவகாரம் தொடர்பாக காவல்துறையிடம் நேரில் முன்னிலையாக அவகாசம் கோரியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத். இது தொடர்பாக கோவை காவல்துறையினரிடம் அவர் சார்பாக நேற்று முன்தினம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், வெளிநாடுகளில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால் ஜனவரி இரண்டாம் வாரத்தில்தான் தம்மால் நாடு திரும்ப முடியும் என அனிருத் குறிப்பிட்டுள்ளார்.

“குறிப்பிட்ட ‘பீப்’ பாடல் விவகாரத்துக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. அந்தப் பாடலுக்கு, நான் இசையமைக்கவில்லை என நடிகர் சிம்புவும் கூறியுள்ளார். எனவே காவல் நிலையத்தில் நேரில் முன்னிலையாக எனக்கு மேலும் 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும்,” என அம்மனுவில் அனிருத் தெரிவித்துள்ளார்.

மாதர் சங்கத்தினர் அளித்த புகாரின் பேரில் அனிருத், சிம்பு மீது கோவை போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். டிசம்பர் 19ஆம் தேதி இருவரும் நேரில் முன்னிலையாக போலிசார் சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை