ஹன்சிகாவின் பெரிய மனசு
Sunday, 10 January 2016 09:37
போகிரிராஜா படத்தில் நடித்து வருகிறார் ஹன்சிகா மோத்வானி.
இந்த படத்தின் கடைசி நாளன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, உடை, உள்ளிட்ட சில அத்யாவசிய பொருட்களை வழங்க முடிவெடுத்தார் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார். அப்போதுதான் ஹன்சிகாவின் பெரிய மனசு வெளிப்பட்டது. சார்... வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரம் காலம் பார்க்காமல் உதவி வரும் துப்புரவு தொழிலாளர்களுக்கு யாருமே எதுவுமே கொடுக்கலேன்னு கேள்விப்பட்டேன். அவங்களில் 100 பேரை அழைச்சுட்டு வாங்க. என் கையால் கொடுக்கிறேன் என்றாராம். உடனடியாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரவழைக்கப்பட்ட அவர்களுக்கு தன் கையாலேயே அரிசி மூட்டையை தூக்க முடியாமல் எடுத்துக் கொடுத்தார் ஹன்சிகா. அரிசி பையின் வெயிட் அஞ்சு கிலோதான். ஆனால் ஹன்சிகாவின் மென்மை அதுக்கே தாங்கலையே?