மலேசியாவைக் காப்பாற்றியது ஜி.எஸ்.டி தான்- டத்தோ ஶ்ரீ நஜிப்

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
மலேசியாவைக் காப்பாற்றியது ஜி.எஸ்.டி தான் டத்தோ ஶ்ரீ நஜிப்

 சவால்மிக்க பொருளாதார சூழலை மலேசியா எதிர்கொள்வதற்கு ஜி.எஸ்.டி எனப்படும் பொருள் மற்றும்  சேவை வரி உதவி இருக்கிறது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.

 ஜி.எஸ்.டி-யின் அமலாக்கத்தைத் தற்காத்து பேசியபோது பிரதமர் நஜிப் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த ஏப்ரலில்  அமல்படுத்தப்பட்ட  ஜி.எஸ்.டி வரிமுறை, நாட்டின் வருமானத்தை உயர்த்தியுள்ளது என்றார் அவர்.

 அரசாங்கத்தின் நிதிநிலை மற்றும் பொருளாதார வளர்ச்சியில் ஜி.எஸ்.டி ஓர் உயிர்க்காப்பாளனாக அமைந்துள்ளது என்று அவர் சொன்னார்.

 அரசாங்கத்தின் நிதிநிலை மற்றும் பொருளாதார வளர்ச்சியில் ஜி.எஸ்.டி ஓர் உயிர்க்காப்பாளனாக அமைந்துள்ளது என்று அவர் சொன்னார்.

 நிதியமைச்சருமான டத்தோ ஶ்ரீ நஜிப், புத்ராஜெயாவில் நிதியமைச்சின் ஊழியர்கள் பங்கேற்ற சிறப்புக்கூட்டத்தில் இன்று உரையாற்றினார்.

2015-ஆம் ஆண்டு டிசம்பர் வரையிலான ஜி.எஸ்.டி வரியின் வழி 2712 கோடி ரிங்கிட் வசூலாகி இருக்கிறது. இவ்வாண்டில், ஜி.எஸ்.டி 3900 கோடி ரிங்கிட்டிற்கு அதிகரிக்கும் என்று மதிப்பிடப்படுவதாக சொன்னார்.

 உலகளாவிய நிலையில், பெட்ரோல் விலை சரிவினால், நாட்டின் வருமானம் குறைந்தபோது, நாட்டுக்கு ஜி.எஸ்.டி பெரும் பயனாக அமைந்தது.

 

2016-ஆம் ஆண்டு இன்னும் கடுமையான சவால் நிறைந்த ஆண்டாக விளங்கும். பெட்ரோல் வழி நமக்குக் கிடைக்கும் வருமானம் மேலும் சுருங்க்க் கூடும் என்று பிரதமர் வர்ணித்தார்.  மக்கள் சார்ந்த திட்டங்களை அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ள ஜி.எஸ்.டி உதவியுள்ளது என்றார் அவர். 

மூலக்கதை