ஆட்சி மாற்றத்திற்கு பின்னரும் தமிழர்கள் மீதான வன்முறை தொடர்கிறது: சர்வதேச அமைப்பு குற்றச்சாட்டு

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 8, ஜனவரி 2016 (5:17 IST)

மாற்றம் செய்த நாள் :8, ஜனவரி 2016 (5:17 IST)

ஆட்சி மாற்றத்திற்கு பின்னரும் தமிழர்கள் மீதான வன்முறை தொடர்கிறது: சர்வதேச அமைப்பு குற்றச்சாட்டு 

 

உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச திட்ட அமைப்பு ஒன்று, 2015ல் இலங்கையில் பாலியல் வன்முறைக்கும், சித்தரவதைக்கும் உள்ளானவர்கள் குறித்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

அதில், தமிழர்களுக்கு ‌அளித்த வாக்குறுதியை புதிய அரசாங்கம் நிறைவேற்றவில்லை. புதிய அரசு பொறுப்பேற்று ஓராண்டு முடிவடைந்த பின்பும் இலங்கை பாதுகாப்புப் படையினரால் பாலியல் வன்முறைகளும், சித்தரவதைகளும் தொடர்ந்து வருகிறது.  ஆதாரங்கள் உள்ளன. 2015ம் ஆண்டு இலங்கை ராணுவம் மற்றும் காவல்துறையினரால் சித்தரவதைப்படுத்தப்பட்ட 20 பேரின் சாட்சியங்கள் உள்ளன. ரகசிய இடங்களிலும், வவுனியா உள்ளிட்ட முகாம்களிலும் தமிழர்கள் மீதான சித்தரவதை தொடர்கிறது.

 

விடு‌தலைப் புலிகள் அமைப்புடன் நேரடியாக தொடர்புடையவர்கள் நாடு‌ திரும்பினால் ஆபத்துகளை சந்திக்க நேரிடும். குற்றச்சாட்டிற்குள்ளான பாதுகாப்பு படையினரை விசாரித்து நீதியின் முன் நிறுத்த வேண்டும். குற்றச்சாட்டிற்குள்ளாகும் பாதுகாப்பு படையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், தமிழர்கள் மீதான வன்கொடுமைகள் தொடரும்.

சர்வதேச செஞ்சிலுவை சங்கம், தமிழ் அரசியல்வாதிகள், இலங்கையில் உள்ள பல்வேறு வெளிநாட்டுத் தூதர்கள் உள்ளிட்டோர் அரசின் விதிமீறல்களை அறிந்துள்ளனர். தமிழர்கள் மீதான வன்முறைகளைத் தவிர்த்து அர்த்தமுள்ள செயல்பாட்டில் இலங்கை அரசாங்கம் செயல்பட வேண்டிய காலம் வந்துவிட்டது என அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

மூலக்கதை